மாணவர்களின் கல்விக்காக 1 கோடி ரூபாய் வழங்கிய சூர்யா!!
பழங்குடி இருளர் இன மாணவர்களின் கல்வி நலனுக்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நடிகர் சூர்யா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெய் பீம்’. நாளை (2ம் தேதி) அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் பிரத்யேக காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது.’ஜெய் பீம்’ படத்தைப் பார்த்த பலரும் படக்குழுவினருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் காட்சியிலும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.பழங்குடி இருளர் இன மக்களின் வாழ்க்கை நெருக்கடிகளை இந்தப் படம் பேசியிருக்கிறது. இந்தப் படத்தை நேற்று (31ம் தேதி) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரத்யேகமாக திரையிட்டுக் காட்டியது படக்குழு. அவரும் படக்குழுவினருக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் முன்னிலையில் இருளர் மாணவர்களின் கல்வி நலனுக்காக, தனது தயாரிப்பு நிறுவனம் சார்பில் 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார் சூர்யா. இதன் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. சூர்யாவின் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #நடிகர்சூர்யா #தமிழகஅரசு #கல்விஉதவி #ஜெய்பீம் #ActorSurya #TamilnaduStudentEducation #பழங்குடிஇருளர்இனம் #ஜெய்பீம்படக்குழு #Jaibheem #TamilnaduGovernment