திமுக அரசை எதிர்த்து அதிமுக மிகப்பெரிய போராட்டம் !!
முல்லைப்பெரியாறு விவகாரத்தை ஆளும் திமுக அரசு கண்டும் காணாமல் இருக்கிறது. தமிழகத்தின் உரிமையை பாதுகாக்கும் ஒரே கட்சி அதிமுக தான் என ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
இன்று மதுரையில் வைத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், “மிகப்பெரிய சட்டப்போராட்டம் நடத்தி முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியாக நிலைநிறுத்தப்பட்டது. தொடர்ந்து 3 முறை சட்டப்போராட்டடம் நடத்தப்பட்டது. அதில் நாமே வெற்றி அடைந்தோம்.
தேனி, திண்டுக்கல், மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் மிகப்பெரிய குடிநீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்குகிறது. இதற்கு நன்றி செலுத்தும் பொருட்டு முல்லைப்பெரியாறு அணைகட்டிய பொறியாளர் பென்னி குயிக்குக்கு நினைவிடம் அதிமுக சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அமைத்தார்கள்.
மதுரையில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் அமைத்து நன்றி தெரிவித்து மாநாடு நடத்தினார்கள். இன்று திமுக தலைவர், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, முல்லைப்பெரியாறு விவகாரத்தை கண்டும் காணாமல் இருக்கிறது.
5 மாவட்ட விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் பொருட்டு, அதிமுக சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் 5 மாவட்டங்களில் நடக்கும். கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியுடன் கலந்து பேசி, போராட்டத்திற்கான தேதி அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்படும்.
மக்கள் எழுச்சியுடன் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடக்கும். தமிழகத்தின் உரிமையை பாதுகாக்கும் ஒரே கட்சி அதிமுக தான். இன்று அது மக்களுக்கு தெளிவாக புரிய வைக்கப்பட்டது” என்று பேசினார்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #திமுக #அதிமுக #முல்லைபெரியாறுஅணை #அதிமுகபோராட்டம் #ADMK #DMK #தமிழகஅரசு #தமிழ்நாடு