தொடர்மழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது . இந்நிலையில் , வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது .இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர் . இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக பெரம்பலூர் , திருவண்ணாமலை , அரியலூர் , விழுப்புரம் . கடலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .அதே போல் செங்கல்பட்டு, மயிலாடுதுறை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதேபோன்று மழை எதிரொலியாக கொடைக்கானலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #தமிழ்நாடு #Tamilnadu #SchoolHoliday #பள்ளிவிடுமுறை #கனமழை #தொடர்மழை