கோக்கு மாக்கு
Trending

தலைமைச் செயலகத்தில் மரம் சாய்ந்து பெண் காவலர் உயிரிழப்பு!! சோகம்!!

சென்னை தலைமை செயலகத்தில் அரசு அலுவலக பணிகள் நடந்து வருகின்றன. கொரோனா பாதிப்புகளால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஊழியர்கள் பணிக்கு சென்று வந்தனர்.இதன்பின்பு தமிழ்நாட்டில் பரவல் குறைந்த சூழலில் இதில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.இந்நிலையில், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது.இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவு அமைந்துள்ள பகுதி அருகே பெரிய மரம் ஒன்று திடீரென சாய்ந்து விழுந்துள்ளது. கனமழையால் மரம் சாய்ந்திருக்க கூடும் என கூறப்படுகிறது.இதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவர் பலியானார். போக்குவரத்து காவலர் ஒருவர் காயமடைந்து உள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார்களும் சேதமடைந்தன. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்த நிலையில், முதல்வர் மு.க ஸ்டாலின் மரம் விழுந்து இறந்த பெண் காவலர் கவிதாவின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.பணியிலிருக்கும்போது உயிரிழந்த தலைமைக் காவலர் திருமதி.கவிதா அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேற்கண்ட சம்பவத்தில் உயிரிழந்த திருமதி.கவிதா அவர்களின், குடும்பத்தாருக்கு உடனடியாக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 10 இலட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.விபத்தில் இறந்த அரக்கோணத்தை சேர்ந்த பெண் காவலர் கவிதா அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். 23 வயதான மகன் சேலம் மகேந்திரா கல்லூரியில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #தலைமைச்செயலகம் #தமிழ்நாடு #பெண்காவலர் #CentralOffice #TamilNadu

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button