செய்திகள்

மரம் விழுந்து உயிரிழந்த பெண் காவலர் உடலுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி…

மரம் விழுந்த தலைமைக் காவலர் கவிதா பலியான சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னையில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் ஆங்காங்கு மழைத் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. சாலையோரம் உள்ள பலவீனமான மரங்களும் விழுந்து வருகின்றன.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தின் நான்காவது நுழைவு வாயில் அருகே உள்ள முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில் முத்தியால்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரியும் சா.கவிதா (43), ராயபுரம் போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரியும் முருகன் ஆகியோர் இன்று (2ம் தேதி) காலை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்கிருந்த தூங்கு மூஞ்சி மரம் திடீரென சரிந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கவிதா, முருகன் ஆகியோர் மீது விழுந்தது. இதில் மரத்தின் அடியில் சிக்கி கவிதா பலத்த காயமடைந்தார். முருகன், லேசான காயத்துடன் உயிர் தப்பினார். மரத்தின் அடிப்பகுதியில் நசுங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கவிதாவை அங்கிருந்த காவலர்களும், அரசு ஊழியர்களும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறிது நேர போராட்டத்துக்குப் பின்னர் மீட்கப்பட்ட கவிதாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், பலத்த காயமடைந்த கவிதா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதையடுத்து கவிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்ததும் தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர். மேற்கண்ட சம்பவத்தில் உயிரிழந்த கவிதா குடும்பத்தாருக்கு உடனடியாக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #முகஸ்டாலின் #பெண்காவலர் #தமிழ்நாடு #Tamilnadu

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button