“புர்கா அணியவில்லை, ஆனா ஜீன்ஸ் அணிந்திருக்க” பெண்ணை திட்டிய முதியவர் !!
அசாம் மாநிலம், சரியாளி பகுதியில் நூரூல் ஆமின் என்ற முதியவர் மொபைல் கடை நடத்தி வருகிறார். இவர் கடைக்கு அந்த பகுதியை சேர்ந்த இளம்பெண் இயர்போன் வாங்க வந்துள்ளார். அந்த பெண் ஜூன்ஸ் அணிந்திருப்பதால் கோபமடைந்த அந்த முதியவர் இளம்பெண்ணை வசைபாட தொடங்கியுள்ளார்.மேலும், நீ புர்கா அணியாமல் ஜூன்ஸ் அணிந்து கொண்டு என்னுடையே கடைக்கு வராதே எனவும் உன்னை பார்த்து என் மருமகள் கெட்டுபோய் விடுவாள் எனவும் அந்த பெண்ணை சரமாரியாக வசைபாடி அவரை கட்டாயப்படுத்தி கடையை விட்டும் வெளியே அனுப்பியுள்ளார்.இந்த சம்பவத்தை அந்த பெண் அவரது குடும்பதினரிடம் கூறியுள்ளார். அந்த பெணின் தந்தை தன் மகளை எப்படி அவமதிக்கலாம் என நூரூல் ஆமினுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். அப்போது அந்த முதியவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த பெண்ணின் தந்தையை சரமாரியாக தாக்கியுள்ளனர்.இதனை அடுத்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் நூரூல் ஆமினை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #அசாம் #புர்கா #Assam #Purka