மழை வெள்ளத்தில் மூழ்கியது தரைப்பாலம்!!
பொள்ளாச்சியில் பெய்த கனமழையால் தரைப்பாலம் மூழ்கி இரு கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் பரவலாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியின் சுற்றுவட்டார பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சோலையார் அணை, பரம்பிக்குளம் அணை, ஆழியாறு அணை உள்ளிட்ட பல அணைகளிலும் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.அதேபோல் பல்வேறு கிராமங்களில் உள்ள குளம் குட்டைகளும் நிரம்பி வருகின்றன.இதில் கோபால்சாமி மலை அருகே உருவாகி பல்வேறு கிராமங்களைக் கடந்து ஆழியார் ஆற்றில் கலக்கும் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கரியாஞ் செட்டிபாளையம் கிராமத்திற்கும் தென் சித்தூர் கிராமத்திற்கும் இடையே கடக்கும் பாலாற்றின் குறுக்கே தரைப்பாலம் ஒன்று உள்ளது.
இரு கிராம மக்களும் இந்த தரை பாலத்தை கடந்தே பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் மூழ்கியது. இதனால் இரு கிராம மக்களுக்கும் இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.இப்பகுதியில் உயர்மட்ட பாலம் கட்டி கொடுக்க வேண்டுமென இந்த கிராம மக்களும் கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் : ஜெகன், பொள்ளாச்சி
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #தரைப்பாலம் #பொள்ளாச்சி #கோவை #வெள்ளம் #Tharaipaalam #Pollachi #Kovai