ஐஏஎஸ் அதிகாரி மனைவி கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை
சென்னை : பத்திர பதிவுத்துறை ஐஜியாக இருப்பவர் சிவன் அருள் (ஐஏஎஸ்). இவரது மனைவி சுமதி வயது 53. இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். மகள் பிரபல மருத்துவமனையில் டாக்டர் ஆக உள்ளார். சமீபத்தில் திருமணம் முடிந்தது. தல தீபாவளிக்காக தனது அம்மா வீட்டிற்கு மகள் வந்துள்ளார். மகன் மருத்துவ கல்லூரியில் படிக்கிறார்.இந்நிலையில் இன்று காலை சுமதியின் மகளும் மருமகனும் துணி எடுக்க போய்விட்டார். ஐஜி சிவன் அருள் வேலைக்கு போய்விட்டார். மகனும் கல்லூரிக்கு போய்விட்டார். ஐஜி சிவன் அருளின் வீடு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ளது. மாடியில் உள்ள வீட்டில் வசிக்கிறார்கள். இவர்கள் வீட்டிற்கு இரண்டு சாவி உள்ளது. வேலைக்கார பெண் வந்தால் திறக்கலாம் என்கிற வகையில் கீழே ஒரு சாவி, அவர்களிடம் ஒரு சாவி என இரண்டு சாவி உள்ளது. இந்நிலையில் வேலைக்கார பெண், சாவியை திறந்து மாடியில் ஏறி போய் இருக்கிறார். அங்கு கழிவறையில் கழுத்து அறுபட்ட நிலையில் கையில் பிளேடுடன் சுமதி பிணமாக கிடந்துள்ளார்.இதை கண்டு அலறி துடித்த வேலைக்கார பெண், கதறி அழுது அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தார். உடனே அக்கம்பக்கத்தினரும் ஓடிவந்தனர். பத்திர பதிவு ஐஜி சிவன அருளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதேபோல் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் அனைவரும் வந்தனர்,சம்பவம் குறித்து அறிந்து மயிலாப்பூர் துணை ஆணையர் நேரில் வந்து விசாரணை நடத்தினார், இதேபோல் ஐஸ் கவுஸ் காவல் நிலைய போலீசார் வந்து சுமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் கொலையா தற்கொலையா என்று விசாரித்தனர். வீட்டில் ஆய்வு நடத்தினர். அதில் தலையணைக்கு அடியில் ஒரு குறிப்பு இருந்தது.அந்த குறிப்பில் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை. மனஅழுத்தம் தான் காரணம் என்று சுமதி கூறியிருந்தார். இது பற்றி விசாரித்த போது, சொந்த ஊரான கடலூரில் குடும்ப சொத்து பிரச்சனையில் மன அழுத்தத்தில் சுமதி இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக சிகிச்சையும் பெற்று வந்துள்ளார்.இதையடுத்து சொத்து பிரச்சனையால் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னையின் பிரதான பகுதியில் ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐஏஏஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பலரும் சிவன் அருளுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
செய்திகள் : ஐசக் அலி, விசாகப்பட்டினம்
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #ஐஏஎஸ் #ஐஏஎஸ்மனைவி #தற்கொலை #IAS #Suicide