செய்திகள்

500 கோடியை தட்டி தூக்கிய தீபாவளி மது விற்பனை !! முழு விவரம்…

500 கோடியை தட்டி தூக்கிய தீபாவளி மது விற்பனை !! முழு விவரம்…

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் டாஸ்மாக்கில் மதுபானங்களின் விற்பனை அமோகமாக நடைபெறும். கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த 2 ஆண்டுகளாக மது விற்பனை குறைந்தது.இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டது. தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பு அனைத்து பார்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.இந்த வருடம் மதுபானங்களை அதிகளவு விற்பதற்கான ஏற்பாடுகளை டாஸ்மாக் அதிகாரிகள் செய்திருந்தனர். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் இல்லை என்று சொல்லாத அளவிற்கு அனைத்து வகையான மதுபானங்களும் குவிக்கப்பட்டு இருந்தது.ஆண்டுதோறும் தீபாவளிக்கு முந்தைய நாளும், தீபாவளி பண்டிகை அன்றும் அதிகளவு மதுபானங்கள் விற்பனை ஆவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு, கடந்த 3ம் தேதி சென்னையில் ரூ.40.69 கோடியும், மதுரையில் ரூ.47.21 கோடியும், சேலத்தில் ரூ.43.27 கோடியும், திருச்சியில் ரூ.45.29 கோடியும், கோவையில் ரூ.36.75 கோடிக்கும் விற்பனையாகி உள்ளது.தீபாவளி அன்று (4ம் தேதி) சென்னையில் ரூ.47.71 கோடி, மதுரையில் ரூ.51.68 கோடி, சேலத்தில் ரூ.48.62 கோடி, திருச்சியில் ரூ.49.57 கோடி, கோவையில் ரூ.37.71 கோடி என மொத்தம் ரூ.239.81 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இதன்படி, இந்த 2 நாட்களையும் சேர்த்து மொத்தம் சுமார் ரூ.450 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது.மற்ற மண்டலங்களை விட, மதுரை மண்டலத்தில் அதிகமாக மது விற்பனை நடந்துள்ளது. அங்கு, ரூ.98.89 கோடி மது விற்பனை நடந்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் ரூ.88.40 கோடி அளவிற்கு மதுபானங்கள் விற்றுள்ளது.கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த வருடம் மது விற்பனை குறைவாக நடந்து இருப்பதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் தீபாவளிக்கு முந்தைய நாள் ரூ.227.88 கோடிக்கும், தீபாவளி அன்று ரூ.239.81 கோடிக்கும் என மொத்தம் ரூ. 467.69 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.கடந்த ஆண்டைவிட இந்த வருடம் மது விற்பனை குறைந்ததற்கு பணப்புழக்கம் குறைந்ததே காரணம் என்று கூறப்படுகிறது. தொழில் மற்றும் வேலைவாய்ப்பு இல்லாமல் வருவாய் குறைந்ததே இந்த சரிவுக்கு காரணம் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மதுபானங்களின் விலை உயர்வும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #மதுவிற்பணை #டாஸ்மாக் #தீபாவளி #tasmac #Diwali

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button