தீபாவளி பரிசாக குஜராத்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று ஊழியர்களுக்கு மின்சார ஸ்கூட்டர் பரிசாக கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.தீபாவளி பண்டிகையின் போது நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு இனிப்பு, பட்டாசு, போனஸ் என்று வழங்குவது வழக்கம். அந்த வகையில் குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த சுபாஷ் தவார் என்பவரின் நிறுவனம் தனது 35 ஊழியர்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பரிசாக கொடுத்துள்ளது.பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் ஊழியர்களுக்கு மின்சார ஸ்கூட்டர் கொடுத்துள்ளதாக நிறுவனத்தின் இயக்குநர் சுபாஷ் தவார் தெரிவித்துள்ளார்.எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கொடுத்ததற்கு பெட்ரோல் விலை உயர்வு காரணம் என்றாலும் கூட, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதால் இந்த முடிவை எடுத்ததாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுற்றுச்சூழலை பாதுகாக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துவருவதாக நிறுவனத்தின் இயக்குநர் சுபாஷ் தெரிவித்துள்ளார்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #குஜராத் #மின்சாரஸ்கூட்டர் #ElectricScooter