விதிகளை மீறி பட்டாசு வெடித்தல் : 1614 பேர் மீது வழக்குப்பதிவு!!
அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து பிற நேரத்தில் பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் 1614 வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நவ. 4 ஆம் தேதியான நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை என இரண்டு மணி நேரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசின் உத்தரவுகள் மீறப்படும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, அரசின் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து, பிற நேரங்களில் பட்டாசுகளை வெடித்ததாக தமிழகம் முழுவதும் தற்போது வரை 1614 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 517 பேரின் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், பட்டாசு கடைகள் மீது 259 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #பட்டாசு #தமிழகஅரசு #வழக்குப்பதிவு #TamilNadu