செய்திகள்

“நான் தான் ஜெயலலிதா மகள்” பரபரப்பை ஏற்படுத்திய பெண்

“நான் தான் ஜெயலலிதா மகள்” பரபரப்பை ஏற்படுத்திய பெண் !!

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.ஜெயலலிதாவின் உடல், சென்னை மெரினாவில், எம்ஜிஆர் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. அதன்பிறகு, தமிழக அரசின் சார்பில் ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதற்காக 2018 மே 8ம் தேதி எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 9.09 ஏக்கரில், 50,422 சதுர அடி பரப்பளவில், சுமார் 79 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ஜெயலலிதா நினைவிடம், கடந்த 27.01.2021 அன்று திறக்கப்பட்டது.இந்நிலையில், தீபாவளியான நேற்று (4ம் தேதி) கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியைச் சேர்ந்த பிரேமா எனும் பெண் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வந்தார். அப்போது அவர், நான் தான் ஜெயலலிதாவின் மகள் என்று கூறினார். ஆனால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவருக்கு அனுமதி மறுத்தனர். அதனைத் தொடர்ந்து அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தீபாவளியான இன்று எங்க அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்க வந்தேன்.ஆனால், என்னை உள்ளே விடவில்லை. என்னுடைய சொந்த ஊர் மைசூர். இங்கு பல்லாவரத்தில் தங்கியிருக்கிறேன். என்னை எல்லோருக்கும் தெரியும்” என்றார். அவரிடம் செய்தியாளர்கள், “இவ்வளவு தினங்கள் இல்லாமல் ஏன் இன்று..?” என்று கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அவர், “அதில் சில காரணங்கள் இருக்கு” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #தமிழ்நாடு #ஜெயலலிதா #TamilNadu #Jeyalalitha

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button