சினிமாசெய்திகள்

துப்பாக்கியில் கிட்டார் வாசிக்கும் ஆண்டவர்!!

துப்பாக்கியில் கிட்டார் வாசிக்கும் ஆண்டவர்!!

உலக நாயகன் கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு, விக்ரம் படத்தின் (First Glance) முதல் பார்வை நாளை வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நவம்பர் 7-ஆம் தேதி தனது 67-வது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார். இந்த பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக அவர் நடித்து வரும் ‘விக்ரம்’ படத்தின் படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி, கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, நாளை மாலை 6 மணிக்கு படத்தின் முதல் பார்வை வெளியிடப்படப்படுகிறது. இதுதொடர்பாக படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘அட்வான்ஸ் ஹேப்பி பர்த் டே உலக நாயகன் கமல்ஹாசான் சார். விக்ரம் உலகத்தின் முதல் பார்வை. அனைவரும் நாளை மாலை 6 மணி வரை காத்திருங்கள்’ எனப் பதிவிட்டுள்ளார். அத்துடன், துப்பாக்கியில் கமல்ஹாசன் கிடார் வாசிக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக ‘விக்ரம்’ படக்குழுவினர் கமல்ஹாசன் பிறந்தநாளை கொண்டாடினார்கள். கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் கத்தி வைத்திருப்பது போன்ற தோற்றத்தால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் , கேக் வெட்டி விக்ரம் படக்குழுவினருடன் கொண்டாட்டத்தில் கமல் ஈடுபட்டார். கேக்கிலும் கூட “once a lion always a lion ” என்ற வசனங்களுடன் கூடிய விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் இடம்பெற்றது.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. புகைப்படத்தில் கமலுடன் மலையாள நடிகர் ஃபஹத் பாசில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களை தவிர இணை – எழுத்தாளர் ரத்தின குமார்,காயத்திரி ஷங்கர், ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் உள்ளிட்டோரும் கமலின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #சினிமா #cinema #விக்ரம் #Vikram #HBDUlaganauagan #Vikram_April2022 #கமல்ஹாசன் #KamalHaasan #லோகேஷ்கனகராஜ் #LokeshKanagaraj

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button