சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் எனும் டயலாக் சினிமா படங்களில் மிக பிரசித்தி பெற்றது
அதேபோன்று மதினா நகரில் உள்ள தமது வீட்டில் கோழி கூட்டினை மர்ம நபர்கள் உடைத்து திருடுபோன கோழிகளின் நிலை என்ன என்று போலீசாரிடம் புகார் கொடுத்துவிட்டு புலம்பி வருகிறார் இஸ்லாமிய மதகுரு ஒருவர்
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் உள்ள மதினா நகரில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது இங்கு சுமார் 2,000 பேர் வசித்து வருகிறார்கள் இப்பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவம் நடைபெற்று வருவதாகவும் அதனை தகுந்த முறையில் குற்றாலம் போலீசார் விசாரணை செய்யாமல் கிடப்பில் போட்டு விடுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்
கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள பள்ளிவாசலில் குருவாக இருக்கும் இமாம் அவரது வீட்டில் பத்துக்கும் மேற்பட்ட நாட்டு கோழிகள் மற்றும் சேவல்கள் மர்ம நபர்கள் இரவில் கூட்டினை உடைத்து எடுத்துச் சென்றுள்ளனர் இது சம்பந்தமாக குற்றாலம் காவல் நிலையத்தில் கடந்த இரண்டு நாட்களாக புகார் மனு கொடுத்தும் போலீசார் விசாரணை என்ற பெயரில் கூட அப்பகுதிக்கு வரவில்லை என்ற வருத்தம் தெரிவித்துள்ளனர்
மேலும் அப்பகுதியில் போலீசார் இரவு ரோந்து வருவதில்லை எனவும் அவர்களின் குற்றம்சாட்டி வருகின்றனர்