திண்டுக்கல் அருகே நூற்பாலையில் தீ விபத்து !
திண்டுக்கல் அருகே நூற்பாலையில் தீ விபத்து. ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்திண்டுக்கல் யாதவ மேட்டு ராஜாக்காப்பட்டியை சேர்ந்தவர் ஜெயசீலன். இவர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர்புறம் உள்ள இந்திரா நகரில் தவமணி நூற்பாலையை கடந்த 15 ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். தீபாவளியை முன்னிட்டு நேற்று முதல் நான்கு நாட்கள் நூற்பாலை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மாலை காவலர் கொல்லன் மட்டும் பணி புரிந்து கொண்டிருந்தார். மாலை மின்விளக்கு போடுவதற்காக உள்ளே சென்று சுவிச்சு போடும் பொழுது, நூற்பாலையில் பின்புறம் உள்ள குடோனில் புகை வருவதை பார்த்து காவலர் கொல்லன் ஜெயசீலன் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். குடோனில் வைக்கப்பட்டிருந்த பஞ்சு மூட்டைகள், பேல்கள், மெஷின்கள் மின்சாதனப் பொருட்கள் பொருட்கள் எரிந்து நாசமாயின. இதன் மதிப்பு சுமார் ரூபாய்.20 லட்சம் ஆகும் திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்தில் இருந்து இரண்டு தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். மின்சார கசிவா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா என தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள் : ரியாஸ், திண்டுக்கல்
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #திண்டுக்கல் #தீவிபத்து #FireAccident