ஒரே இரவில் வெள்ள காடாக மாறிய சென்னை!!
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மாநிலத்தின் தலைநகரான சென்னையில் நேற்று இரவு முதல் விடிய, விடிய கனமழை பெய்து வருகிறது.இதனால், மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 9-ந் தேதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் விடிய விடிய பெய்த கனமழையால் சென்னை சாலைகள் வெள்ள நீரில் மூழ்கின. கனமழை காரணமாக சென்னை மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்மேலும், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், ,தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை அல்லது கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #Chennai #ChennaiRains #சென்னை