மல்லிகைப்பூ ரூ 2200 – மகிழ்ச்சியில் விவசாயிகள் ; அதிர்ச்சியில் வியாபாரிகள்!!
திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பூக்களின் விலை எகிறியது .மல்லிகைப்பூ 2200க்கு விற்கப்படுவதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் செம்பட்டி, நிலக்கோட்டை, சின்னாளபட்டி, வெள்ளோடு, சாணார்பட்டி, ஒட்டன்சத்திரம், வட மதுரை உட்பட பல இடங்களில் பூ விவசாயம் செய்யப்படுகிறது. இந்த பூக்கள் திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பூக்கள் அனைத்தும் உதிர்ந்து பல இடங்களில் செடிகளில் அழுகிய நிலையில் காணப்படுகிறது. இதனால் பூக்களை பறிக்க முடியாமல் விவசாயிகள் வேதனையில் தவிக்கின்றனர். அதே நேரத்தில் எப்போதும் ஆயிரத்தி தாண்டாத மல்லிகைப்பூ கிலோ ரூ. 2200 விற்கப்படுவதால் வியாபாரிகள் வாங்க முடியாமல் தவித்தனர். மல்லிகை விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை விடும் வரை இந்த நிலைமை தொடரும் என விவசாயிகள் தெரிவித்தனர். திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் விற்பனையாகும் பூக்களின் விலை கிலோவில் வருமாறு:மல்லிகை பூ – ரூ. 2200 முதல்.,முல்லை பூ – ரூ.1200 முதல்.,கனகாம்பரம் – ரூ.1500 முதல்.,ஜாதிப் பூ – ரூ.600.செவ்வந்தி – ரூ.50.சம்பங்கி – ரூ. 60.அரலி – ரூ. 120.கோழி கொண்டை – ரூ.30.செண்டு மல்லி – ரூ.30/50.ரோஸ் – ரூ.80/100க்கு விற்பனை செய்யப்பட்டது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #மல்லிப்பூ #பூமார்க்கெட் #தமிழ்நாடு