பள்ளி விடுமுறை : எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுனுமா?
சிவகங்கை மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.தொடர் மழை காரணமாக மாணவர்கள் நலன் கருதி விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.கரூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.தஞ்சையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.தொடர் மழையின் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையின் காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.மயிலாடுதுறை மாவட்டத்தில் பருவமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #மழை #தொடர்மழை #பள்ளிவிடுமுறை #Rain #RainToday #SchoolHoliday