புனித் ராஜ்குமாரின் மருத்துவருக்கு போலீஸ் பாதுகாப்பு!!
நடிகர் புனீத் ராஜ்குமாரின் மரணம் என்பது கன்னடத் திரையுலகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த கர்நாடகத்தாலுமே ஏற்றுக்கொள்ள முடியாததாகத்தான் உள்ளது. புனித் ராஜ்குமார் கன்னடத் திரையுலகத்தில் அனைவராலும் நேசிக்கப்பட்டவர். ‘A Man with no haters’ என்கிறது அவரை அறிந்த வட்டாரங்கள். 2002ம் ஆண்டு கன்னடத் திரையுலகில் அப்பு திரைப்படம் மூலம் அறிமுகமான புனித் ராஜ்குமார்.அதன்பிறகு அதே பெயராலேயே அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்டார். புனித் ராஜ்குமார் மறைந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமல், அவரது ரசிகர்கள் இருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர்.புனித் ராஜ்குமாரின் மறைவு செய்தியை அறிந்து 10 ரசிகர்கள் உயிரிழந்தனர்.
இதனிடையே புனித் ராஜ்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி சமூக வலைத்தளத்தில் சிலர் பதிவிட்டனர். மருத்துவ கவனக்குறைவு காரணமாகவே புனித் ராஜ்குமார் மறைந்ததாகவும் சிலர் பதிவிட்டனர். இதனால் அவரது ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர்.
இந்நிலையில், புனித் ராஜ்குமாருக்கு சிகிச்சை அளித்து வந்த அவரது குடும்ப மருத்துவர் டாக்டர். ரமணா ராவ், மற்றும் பிற மருத்துவ குழுவினருக்கு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் அனுப்பினர்.
இந்நிலையில் பெங்களூருவின் சதாசிவ நகரில் உள்ள புனித் ராஜ்குமாரின் மருத்துவர் ரமணா ராவின் மருத்துவமனைக்கு போலீஸ் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. ரமணா ராவுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடாமல் தடுக்கவே இந்த போலீஸ் பாதுகாப்பு என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #புனித்ராஜ்குமார் #கன்னடபவர்ஸ்டார் #PunithRajkumar #PowerStar #Cinema