மேட்டூர் அணை திறப்பு : 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று (08.11.2021) இரவு 8.00 மணி அளவில் 118.3200 அடியை எட்டியது. வடகிழக்கு பருவமழை காரணமாக அணையின் நீர்மட்டம் இன்று காலை 5.00 மணியளவில் 119.00 அடியை எட்டியது.
இதையடுத்து, அணையில் இருந்து உபரி நீர காவிரி ஆற்றில் முதற்கட்டமாக 5000கனஅடி திறந்துவிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு படிப்படிபாக அதிகரிக்கப்படும் என தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 15,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 119 அடியாக உயர்ந்த நிலையில் காலை 5 மணிக்கு 5,000 கன அடி நீர் திறக்கப்பட்டு தற்போது படிப்படியாக 15,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
எனவே காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்காக அனைத்து முன்னெச்சர்க்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #மேட்டூர்அணை #வெள்ளம் #MetturDam #Flood