மறுபடியும் முதல்ல இருந்தா!! மீண்டும் ரஜினி- சிவா கூட்டணி
சிறுத்தை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் இயக்குனர் சிவா. இதற்கு முன்பு சிறுத்தை சிவா ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். தொடர்ந்து நடிகர் அஜித்துடன் சேர்ந்து வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் ஆகிய திரைப்படங்களை இயக்கினார்.இந்நிலையில் ரஜினியை வைத்து இயக்கி தீபாவளி அன்று வெளியிடப்பட்டது. இப்படம் வசூலில் சாதனை புரிந்தது. ஆனால் மக்களிடமே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. பல்வேறு வகையான விமர்சனங்களை பெற்றது. நெட்டிசன்களோ சமூக வலைத்தளங்களில் கிழித்து விட்டார்கள். இருப்பினும் அடுத்ததாக சிறுத்தை சிவா நடிகர் சூர்யாவை வைத்து ஒரு புதிய படத்தை செய்து இயக்கவுள்ளார். இத்தகைய சூழலில் தற்போது நடிகர் ரஜினியுடன் மீண்டும் சிறுத்தை சிவா கூட்டணி அமைக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் இந்த திரைப்படத்தை சவுந்தர்யா ரஜினி தயாரிக்கப் போகிறார் என்றும் கூறப்படுகிறது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #சினிமா #சிறுத்தைசிவா #ரஜினி #அண்ணாத்த #Cinema #Rajini #Superstar #SiruthaiSiva #Annaatthe