முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக உரிமையை மீட்க கோரியும், திமுக அரசின் போக்கை கண்டித்தும் திண்டுக்கல்லில் அதிமுக முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்தும் கேரள முதலமைச்சரை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீரை கேரள அரசு அத்துமீறி எடுத்ததையும், அதை கண்டுகொள்ளாத தமிழக அரசையும் கண்டித்தும் தென் மாவட்டங்களில் இன்று (09.11.21) அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதனையடுத்து திண்டுக்கல் கல்லரை தோட்டம் அருகே அதிமுக மேற்கு மாவட்ட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலாளருமான திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கட்சி தெரண்டர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சீனிவாசன்….
எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோதும் எப்படி மழை தொடர்ந்து பெய்தது அதுபோல தொடர்ந்து தற்போது மழை பெய்து குடிநீர் உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்கிறது அதெல்லாம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா மேலே இருந்து நமக்கு ஆசி வழங்குவது மூலம் தான். திமுக ஆட்சிக்கு வந்து ஆறு மாதம் ஆகிறது அவர்களில் சாதாரண தொண்டன் முதல் மேலே உள்ள தலைவர்கள் வரை யாராவது திருந்தி இருக்கிறார்களா என்றால் இதுவரை இல்லை. ஆளும் கட்சியின் பயமுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களுக்கு மீறி எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதிமுகவிற்கு போராட்டம் நடத்துவதற்கு காவல் துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
மக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் மக்களுக்காக நாம் ஆற்றும் சேவை மற்றும் கருத்துக்களை எப்படி சொல்ல வேண்டுமோ அதற்கு இறைவன் நமக்கு வழி வகுத்துக் கொடுத்து இருக்கிறான். திமுக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது அமைச்சர்கள் ஏதாவது ஒரு பொய்யைச் சொல்லி அதிமுகவை பழி வாங்கலாம் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது தொடர் மழை பெய்து வருகிறது முதலமைச்சரின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் இடுப்பளவு தண்ணீர் உள்ளது என தொலைக்காட்சியில் பொதுமக்கள் அளிக்கும் பேட்டியை பார்த்தேன். முதலமைச்சர் தனது தொகுதியை கூட சரி செய்யாமல் வைத்திருக்கிறார். இவர் எப்படி தமிழ்நாட்டை சரி செய்வார் என பொதுமக்கள் கூறுகின்றனர். ஆறு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது திமுக ஆட்சிக்கு வந்து இதற்கு முன்பு மழை வந்த போதும் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பல்வேறு திட்டங்களை செய்து தூர்வாரி வாய்க்காள்களை சரி செய்து தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொண்டனர்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #திமுக #தமிழகஅரசு #அதிமுக #முல்லைபெரியாறுஅணை #DMK #ADMK #Tamilnadu #TNGovt #MullaiPeriyarDam