நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா மீது பாமகவினர் புகார்!!
சமீபத்தில் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்திருந்த திரைப்படம்தான் ஜெய் பீம். இப்படம் தமிழக மக்களின் மனதில் ஒரு மாறுதலை ஏற்படுத்தியதோடு பல்வேறு தரப்பு மக்கள் இந்த படத்தை பாராட்டினர். இந்நிலையில் ஜெய்பீம் திரைப்படம் சாதி உணர்வை தூண்டும் விதமாக இருப்பதாக கூறி சேலம் மேற்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தில் வில்லனாக காண்பிக்கப்படும் காவலர் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவராக அடையாளப் படுத்தப் பட்டிருக்கும். இந்த காட்சிகள் ஜாதி வண்ணத்தில் தூண்டும் விதமாக இருப்பதாக பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இத்தகைய நிலையில் சேலம் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மாணிக்கம் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று மாலை இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில்,” சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் வன்னியர் மற்றும் இருளர் சமுதாய மக்களிடம் சாதி வன்முறையை தூண்டும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் காரணமாக தமிழகத்தில் ஜாதி கலவரம் ஏற்படக் கூடும். எனவே இந்தப் படத்தின் நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஜோதிகா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #சினிமா #சூர்யா #ஜோதிகா #பாமக #ஜெய்பீம் #Surya #Jothika #PMK #JaiBheem