வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து பரவலான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது.கடந்த சனிக்கிழமை இரவு சென்னையில் அதி கனமழை பெய்தது. இதனால் சென்னை நகரம் வெள்ளம் சூழ்ந்தது. பெரும்பாலான இடங்களில் வெள்ளம் வெளியேற்றப்பட்ட நிலையில், இன்னும் சில இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்த வண்ணம் உள்ளது.இதனிடையே இன்றும், நாளையும் ஒரு சில மாவட்டங்களில் அதி மழை பெய்ய வாய்ப்புள்ளதால் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.இந்நிலையில், கனமழை தொடர்வதால் ஒருசில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கரூர், விழுப்புரம், புதுக்கோட்டை, கடலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், திருச்சி, இராமநாதபுரம், திருவண்ணாமலை, மதுரை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, சேலம், திண்டுக்கல், விருதுநகர், தேனி மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #கனமழை #பள்ளி_விடுமுறை #தமிழ்நாடு