மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.20,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ . பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார் .இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் பெய்த கனமழை காரணமாக , சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பெரும்பாலான தெருக்களில் மழைநீர் தேங்கி , அங்குள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததன் விளைவாக ஏழை எளிய மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் , காய்கறிகளின் விலைகள் உச்சத்திற்கு சென்றிருப்பதும் , மின்சாரம் இல்லாமல் இருப்பதும் .மின்சாரக் கட்டணம் செலுத்த வேண்டியதற்கான காலம் நெருங்குவதும் அவர்களை மேலும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்ப்ப தன் காரணமாக, சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காய்கறிகளின் விலை விஷம் போல் உயர்ந்துள்ளது. தீபாவளி தினத்தன்று 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று 100 ரூபாய், 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், கேரட் கிலோ 100 ரூபாய்க்கும், பீன்ஸ் கிலோ 90 ரூபாய்க்கும், கத்தரிக்காய் கிலோ 85 ரூபாய்க்கும், குடமிளகாய் கிலோ 150 ரூபாய்க்கும், வெங்காயம் கிலோ 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாகவும், இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.இந்தச் சூழ்நிலையில் காய்கறிகளை பலிவு விலையில் விற்பனை செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது. இது ஒரு புறமிருக்க, தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் கனமழை காரணமாக சென்னைக்கு திரும்ப முடியாத சூழ்நிலையில் இருப்பதால், அவர்கள் இந்த மாதத்திற்கான மின் கட்டணத்தை செலுத்த இயலாத நிலையில் இருப்பதாகவும், இங்குள்ளவர்கள் கனமழை காரணமாக வீட்டில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றுவதிலும், இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் சென்னையில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை இருக்கும் என்று கணித்துள்ள நிலையில் அதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதிலும் சென்னை வாழ் மக்கள் தங்கள் கவனத்தை செலுத்திக் கொண்டிருப்பதாலும், சாலைகளில் நீர் தேங்கி இருப்பதன் காரணமாக அவர்களால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை உள்ளதாலும் இந்த மாதம் கட்ட வேண்டிய மின் கட்டணத்தை செலுத்த கூடுதல் அவகாசம் வழங்க வேண்டுமென்ற கோரிக்கை மின் பயனீட்டாளர்களிடையே வலுத்து வருகிறது.இதுமட்டுமின்றி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும், சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் இரண்டு மூன்று நாட்கள் கழித்து சென்னைக்கு திரும்புமாறு வேண்டுகோளும் விடுத்துள்ளார். எனவே, இந்த மாதம் மின் கட்டணத்தை செலுத்துவதற்கு கூடுதல் அவகாசம் தேவை என்ற கோரிக்கையில் நியாயம் உள்ளதாகவே நான் கருதுகிறேன்.மேலும், கனமழை காரணமாக தெருக்களில் தண்ணீர் தேங்கியதன் காரணமாகவும், வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததன் காரணமாகவும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பெரம்பூர், வில்லிவாக்கம், கே.கே. நகர், அசோக் நகர், மேற்கு மாம்பலம், தியாகராய நகர், வேளச்சேரி, பள்ளிக்கரணை போன்ற பகுதிகளில் பாதுகாப்பு காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டாலும், சில இடங்களில் மழைநீர் வடிந்தும் மின் இணைப்பு அளிக்கப்படவில்லை என்றும், இரண்டு, மூன்று நாட்களாக மின்சாரம் இன்றி பொதுமக்கள் அவதிப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன. இரண்டு, மூன்று நாட்கள் மின்சாரமின்றி இருப்பது என்பது மிகுந்த சிரமம். இதுவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.இதுபோன்ற இயற்கை சீற்றங்களின் போது மக்களுக்கு மலிவு விலையில் காய்கறிகள் கிடைக்கவும், மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கவும், மழைநீர் வடிந்த இடங்களில் மின் இணைப்பை விரைந்து அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில அரசின் கடமையாகும். இதுமட்டுமல்லாமல், வீடுகளில் தண்ணீர் புகுந்ததன் காரணமாக பாதிப்பு அடைந்தவர்களுக்கு நிவாரணம் அளிப்பதும் அரசின் தலையாய கடமைகளில் ஒன்று, 2015 ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிவாரணமாக அவர்களது வங்கிக் கணக்கில் 5,000 ரூபாய் செலுத்தியவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் என்பதை இந்தத் தருணத்தில் நினைவூட்ட விரும்புகிறேன்.எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி, கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் காய்கறிகளை மலிவு விலையில் எழை எளிய மக்களுக்கு வழங்கவும், மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை இந்த மாத இறுதி வரை நீட்டிக்கவும், வெள்ளம் வடிந்த பகுதிகளில் மின் இணைப்பை விரைந்து அளிக்கவும், இவை எல்லாவற்றிற்கும் மேலாக, வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிவாரணமாக 20,000 ரூபாய் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.
Read Next
க்ரைம்
19 hours ago
மான் வேட்டை – 4 பேர் கைது
விமர்சனங்கள்
2 days ago
100 நாள் வேலை – நடப்பது என்ன ???
19 hours ago
மான் வேட்டை – 4 பேர் கைது
2 days ago
வாக்கி டாக்கி இருக்கு – ஆனா பேசத்தான் முடியாது – பல லட்ச ரூபாய் மக்கள் வரிப்பணம் காலி
2 days ago
100 நாள் வேலை – நடப்பது என்ன ???
3 days ago
தேனீக்கள் கடித்து ஒருவர் உயிரிழப்பு – ஆபத்தான நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி
3 days ago
வெட்டுகத்தியால் காட்டு பன்றியை வேட்டையாடிய நபர் – வெட்டுகத்தியுடன் கைது
5 days ago
*வன நிலங்கள் விற்பனைக்கு – கூவி கூவி விற்கும் புரோக்கர்கள் – வேடிக்கை பார்க்கும் வருவாய் துறை மற்றும் வனத்துறை*
5 days ago
சேரன்மாகாதேவியில் ஆட்டோ கவிழ்ந்து அரசு பள்ளி மாணவி பலியான சோகம்
6 days ago
மக்கள் நடமாடும் பகுதிகளில் சுற்றி வந்த கரடியை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்
6 days ago
“பதில் சொல்லுங்க…” – திமுக ஆர்ப்பாட்டத்தில் அமைச்சரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய பெண்!
1 week ago
கடத்த முயன்ற மண்ணுளி பாம்பு – ரோந்து போலீசார் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்
Related Articles
சாலையில் சுற்றி திரியும் மாடுகள்
December 8, 2024
துணை முதல்வர் பிறந்த நாள் விழா – அன்னதானம்
November 29, 2024
ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்:
November 21, 2024
நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்.. ஒருவர் கைது
November 23, 2024
Check Also
Close
-
சிறுபாலம் கட்டும் பணிNovember 25, 2024