செய்திகள்

தொடர்மழை : சுவர் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு!!

தொடர்மழை : சுவர் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு!!

தொடர்ந்த மழையின் காரணமாக சுமார் 1000 ஏக்கருக்கு மேல் மழை நீரினால் முழ்கியுள்ளது. கும்பகோணத்தை அடுத்த பாபுராஜபுரம் ஊராட்சியில் கொட்டையூர் பகுதி தெருக்களில் மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளை கும்பகோண சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன்மற்றும் தண்ணீர் வடிவதற்கு நடவடிக்கை மேற்கொண்டார். இதே போல் தஞ்சாவூர் கும்பகோணம் சாலைகள் பலத்த மழையினால், குண்டு குழியுமாக காட்சியளிக்கின்றது. ஜல்லிகள் பெயர்ந்து மிகவும் ஆபத்தான நிலையில் சாலையில் சிதறி கிடக்கின்றது.

தேனாம்படுகை கிராமத்தை சேர்ந்த மணி மகன் கௌதமன் (28) குடும்பத்துடன் தொகுப்பு வீட்டில் வசித்து வந்தனர். தொடர் மழையினால் மற்றும் கௌதமன் மற்றும் மகள் அனன்யா (4) ஆகிய இருவர் மீது மண் சுவர் இடிந்து விழுந்து பலத்த காயமடைந்தனர். இருவரையும், அப்பகுதியினர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி அனன்யா உயிரழந்தார்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், மாவட்ட நிர்வாகம் ஒவ்வொரு முறையும் துார் வாரும் பணியின் போது கண்துடைப்பிற்காக பணிகள் செய்கின்றனர். பெயரளவிற்கு மட்டும் செய்வதால், பலத்த மழையின் போது, வாய்க்கால்களில் மழை நீர் செல்லாமல் வயல்களிலேயே தேங்கி விடுகிறது. இதனால் நடவு செய்யப்பட்ட அனைத்து நாற்றுக்களின் நிலை கேள்வி குறியாகியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், இனி வரும் காலங்களில் வடிகால், பாசன வாய்க்கால்களை, அளவீட்டின் படி, முறையாக துார் வார வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #தஞ்சாவூர் #தொடர்மழை #சுவர்_இடிந்து_சிறுமி_பலி #Thanjavur #Rain #Thanjavur_Rain

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button