மின் கட்டணம் அவகாசம் நீட்டிக்கப்படுமா?? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்…
தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெள்ள பாதிப்பு விவரங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், “தமிழக முதல்வர் பல்வேறு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அந்த வகையில் தற்போது மின்தட்டுப்பாடு விவரங்கள் குறித்தும், மின் வாரிய பயன்கள் குறித்தும் தொடர்ந்து கேட்டிருக்கிறார்.
ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மழைப்பொழிவு அதிகம் இருந்தாலும் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாக மின் தடை ஏற்படாது. தண்ணீர் தேங்கினால் மட்டுமே மின் தடை செய்யப்படும்.
ஓ.பன்னீர் செல்வம் மின் கட்டணம் செலுத்த அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அது அவரின் கருத்து. ஆனால், மக்கள் யாரும் இதுகுறித்து கருத்துக்களை முன்வைக்கவில்லை. இருந்தாலும், தமிழக முதல்வரிடம் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும்.
34,047 மின் மாற்றிகளில் 41 மின் மாற்றிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவை வியாசர்பாடி, எழும்பூர், தியாகராய நகர் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 4,000 களப்பணியாளர்கள் சென்னை புறநகரில் இரவு பகலாக பணியில் உள்ளனர்.
திருவள்ளூரில் 1,350 களப் பணியாளர்களும், செங்கல்பட்டில் 2,040 பணியாளர்களும் உள்ளனர். இதேபோல் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் களப் பணியாளர்கள் உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 12 ஆயிரம் களப்பணியாளர்கள் பணியில் உள்ளனர். தற்பொழுது வரை மின் உற்பத்தியில் எவ்வித பாதிப்பும் இல்லை. நிலக்கரி போதுமான அளவு உள்ளது” என்றார்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #மின்கட்டணம் #தமிழ்நாடு #தமிழ்நாடு_மின்சாரவாரியம் #சென்னை #அமைச்சர்_செந்தில்பாலாஜி #TamilNadu #TNEB #TamilnaduElectricityBoard #SenthilBalaji