“இன்னும் அவரு சாகல தூக்குங்க” தனது தோளில் தூக்கிசென்று உயிரை காப்பாற்றிய பெண் காவலர்!!
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாட்டில் மழை கொட்டித்தீர்த்து வருகிறது.
குறிப்பாக, தலைநகர் சென்னையில் கடந்த சனிக்கிழமை இரவு 20 செ.மீ. அளவில் பதிவாகிய மழை கடந்த நான்கு தினங்களாக பரவலாக பெய்து வந்த நிலையில், நேற்று இரவு முதல் மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இதனால், சென்னை மாநகரின் பல பகுதிகளிலும் மழையின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளதுடன் சூறைக்காற்றும் வீசி வருகிறது.
சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறையில் பணியாற்றி வருபவர் உதயா. இவர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறையிலே பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த உதயாவிற்கு, சென்னையில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் உடல்நலம் மேலும் மோசமாகியுள்ளது. இந்த நிலையில், கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட உதயா இன்று மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டு கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறையின் மீதே மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தகவலறிந்த டி.பி.சத்திரம் காவல்நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி கீழ்ப்பாக்கம் கல்லறைக்கு விரைந்தார். அங்கு உதயாவை சுற்றிலும் முறிந்து விழுந்திருந்த மரங்களின் கிளைகளை அகற்றி, உதயாவை மீட்டார். முழுவதும் மயங்கிக்கிடந்த உதயாவை திரைப்படங்களில் காட்டுவது போல தனது தோளிலே தூக்கிக்கொண்டு கீழ்ப்பாக்கம் கல்லறையில் இருந்து வெளியே வந்தார். பின்னர், உதயாவை ஆட்டோவில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.
கல்லறையில் மயங்கிக்கிடந்த கல்லறை ஊழியரை மீட்டு, தோளில் தூக்கிக்கொண்டு வந்து சிகிச்சைக்கு அனுப்பிவைத்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #சென்னை #கனமழை #வெள்ளம் #மழைவெள்ளம் #பெண்காவலர் #சிங்கப்பெண்ணே #தமிழ்நாடு #TamilNadu #TamilNadu_Police #SingaPenne