அபூர்வ சகோதரர்கள் எனும் ஆச்சரியம்
“ஒத்தயா நின்னு நான் வித்தய காட்டுவேன் என் சித்தப்பு” இது அபூர்வ சகோதரர்கள் படத்திற்காக வாலி கமலுக்கு என பிரத்தியோகமாக எழுதினார் போல. உண்மையில் கமல்ஹாசன் அந்தப் படத்தில் தனியாளாக நின்று தனது திறமைகள் அத்தனையும் நிரூபித்து இருந்தார்.
1989 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம், இந்திய சினிமா வரலாற்றில் மட்டுமின்றி கமல்ஹாசனின் திரை வாழ்க்கையிலும் ஒரு மைல் கல்லாக அமைந்தது. 1982 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான சகலகலா வல்லவன் அதுவரை தமிழ் சினிமாவில் இருந்த அத்தனை வசூல் சாதனைகளையும் முறியடித்து இருந்தது.
ஏழு ஆண்டுகளுக்குப் பின்பு தன் சாதனையை தானே முறியடித்து தனது திறமையை மீண்டும் உலகிற்கு காட்டினார் உலகநாயகன். யாரும் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத கதை அம்சம் கொண்ட பல படங்களை சோதனை முயற்சி செய்ய வைத்த பெருமை நாயகன் படத்தையே சாரும். காரணம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நாயகனுக்கு கிடைத்த வரவேற்பு அப்படி.
வரவேற்பின் மகிழ்விலும் துணிச்சலும் கமல்ஹாசன் அந்த அனுபவம் தான் பேசும் படம் அதுவரை அப்படி ஒரு படத்தை யாரும் நினைத்துக்கூட பார்த்தது கிடையாது. இருந்தும் இந்தப் படம் விமர்சன ரீதியாக பெரும் வெற்றியடைந்தது. பின்னர் மூன்று படங்கள் இளைஞர்களை கவர சத்யா, போலீஸ் கதையான சூரசம்ஹாரம், பாலச்சந்தர் எழுத்தில் உன்னால் முடியும் தம்பி போன்ற படங்கள் கமல்ஹாசன் நடிப்பில் வெளியானது. அதன் பின்னர் தான் கமல் மூன்று வேடங்களில் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானது, மறுகணம் பற்றிக்கொண்டது கோடம்பாக்கம்.
பொதுவாகவே ரசிகர்களின் நாடி பிடித்துப் பார்த்து தன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்பவர் உலகநாயகன். முதலில் இந்தப் படம் அப்பு என்ற வளர்ச்சி குறைபாடு உடைய கதாபாத்திரத்தை கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதை தயாரிக்க கமல்ஹாசனை பாலச்சந்தரை அணுகியபோது அப்பு என்ற கதாபாத்திரத்திற்கு நிறைய மெனக்கட வேண்டும், சோதனை முயற்சி தோல்வியில் முடிந்தால் விளைவு உன்னை அதள பாதாளத்திற்கு கொண்டு சென்றுவிடும், அதனால் இதை என்னால் தயாரிக்க முடியாது என மறுத்து விட்டார்.
இருந்தும் மனம் தளராத கமல்ஹாசன் அந்தப்படத்தை தானே தயாரிக்க முடிவெடுத்தார். பின்னர் கதை விவாதத்தில் கதை எழுதிய பஞ்சு அருணாச்சலம் கோடம்பாக்கம் ரசிகர்களைத் திருப்திப்படுத்த ராஜா என்ற மெக்கானிக் கேரக்டரை உருவாக்க முடிவெடுத்து கமலிடம் கூறினார். அதற்கு ஒப்புக் கொண்ட கமல் வழக்கமான ரசிகர்களை திருப்திபடுத்த ராஜா என்ற கதாபாத்திரத்தையும் கதையை முன்னெடுத்துச் செல்ல அப்பு என்ற கதாபாத்திரத்தையும் வடிவமைக்குமாறும் கூறினார்.
இப்படத்தில் நேர்மையான அதிகாரியாக சேதுபதி கதாபாத்திரத்தில் கமல் நடித்துள்ளார், அந்த ஊரில் உள்ள பெரிய மனிதர்களான நாகேஷ், டெல்லி கணேஷ், நாசர் மற்றும் ஜெய்சங்கர் ஆகிய நால்வரும் செய்த குற்றத்திற்காக அவர்களை சேதுபதி கைது செய்து சிறையில் அடைக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சேதுபதியின் மனைவி நிறைமாத கர்ப்பிணியான ஸ்ரீவித்யாவை மிரட்டி விஷத்தை குடிக்குமாறு கட்டாயப்படுத்துகின்றனர். ஸ்ரீவித்யாவும் விஷத்தை அருந்த வில்லன்கள் நால்வரும் சேதுபதியை கொடூரமான முறையில் கொல்கின்றனர். ஸ்ரீவித்யா விஷம் அருந்தியதால் இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை வளர்ச்சி குறைபாடுடன் பிறக்கிறது. வில்லன்களிடம் இருந்து தப்பிச் சென்ற ஸ்ரீவித்யா மனோரமாவை சந்திக்கிறார். மனோரமா ஸ்ரீவித்யாவுக்கு பிரசவம் பார்க்கிறார், இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன. வில்லன்கள் அவர்கள் இருக்கும் இடத்தை தேடி அவர்களை கொல்ல முயற்சிக்கும் பொழுது ஒரு குழந்தை மனோரமாவிடம் மெக்கானிக்காகவும் மற்றொரு குழந்தை ஸ்ரீவித்யாவிடம் சர்க்கஸில் ஜோக்கராகவும் வளரும் சூழ்நிலை ஏற்படுகிறது.
இந்த திரைப்படத்தில் ராஜாவிற்கு தனது தந்தை எவ்வாறு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார் என்பதை தனது சகோதரனான அப்புவின் மூலமே தெரிந்து கொள்கிறார். அப்பு தனக்கு தெரிந்த சர்க்கஸ் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வில்லன்கள் நால்வரையும் கொலை செய்கிறார், அந்த கொலைக்கு ராஜா தான் காரணம் என்று போலீஸ் சந்தேகிப்பதும் படத்தின் இடையிடையே காமெடி கலாட்டாவையும் ஏற்படுகிறது.
படத்தின் எழுத்தாளர், மறைந்த பஞ்சு அருணாச்சலம், ஒரு பேட்டியில், படம் தொடங்கப்பட்டு சில நாட்கள் படமாக்கப்பட்ட பிறகு கமல் தன்னை இணைத்துக் கொண்டதாகக் கூறினார். கமலும் இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் ஸ்கிரிப்ட் வடிவமைக்கும் விதத்தில் மகிழ்ச்சியடையவில்லை. பின்னர் கமல் ஹாசனுக்கே உரித்தான சரியான கதைக்களத்துடன் எழுத்தாளர் பஞ்சு அருணாச்சலம் மீண்டும் வந்தார்.
தற்போது இருக்கும் நவீன தொழில்நுட்பங்கள் அதிகம் இல்லாத காலத்தில் இவ்வளவு அருமையான திரைப்படத்தை கமல்ஹாசனின் இரட்டை வேடத்தில் தந்துள்ளது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #சினிமாசெய்திகள் #அபூர்வசகோதர்கள் #கமல்ஹாசன் #ராஜ்கமல்ஃபிலிம்_இண்டர்நேசனல் #அப்பு #இளையராஜா #KamalHassan #உலகநாயகன் #UlagaNayagan #ApoorvaSagothargal #RajKamal_Film_International #Ilayaraja