போதையில் தகராறு : வாலிபர் கல்லால் அடித்து படுகொலை : போலீஸ் விசாரணை
நாகையில் மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறில் டாஸ்மாக் கடை முன்பு வாலிபர் கல்லால் அடித்து படுகொலை : 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை
நாகை வெளிப்பாளையம் தாமரைக்குளம் தென்கரைவை சேர்ந்தவர் மாரியப்பன் (25). இவர் நாகை மருந்து கொத்தள சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கினார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சில வாலிபர்களும் மது வாங்கினர். இதில் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வாலிபர்கள் மாரியப்பனை அங்கு கிடந்த கல்லை எடுத்து தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதில் படுகாயமடைந்த மாரியப்பன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த நாகை நகர போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சம்பவ இடத்திற்கு சென்று மாரியப்பனின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் டாஸ்மாக் கடை முன் மது போதையில் இரத்தக் கறைகள் இருந்த மூன்று நபர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தப்பியோடியவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். மது வாங்குவதில் ஏற்பட்ட மோதலால் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகள் : ச.ராஜேஷ், நாகை
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #நாகை #நாகப்பட்டினம் #போதை_தகராறு #கல்லால்_அடித்து_கொலை #டாஸ்மாக் #Nagapatnam #TASMAC