அதிரடி உத்தரவு : அரசு பேருந்துகளில் பாட்டு கேட்க தடை!!
தற்போதைய காலக் கட்டத்தில், பேருந்துகளில் பயணம் செய்யும் போது, கையில் ஸ்மார்ட் போனை வைத்துக் கொண்டு, அருகில் இருக்கும் பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுமா, இல்லையா என்பதை கருத்தில் கொள்ளாமல், பாட்டுக் கேட்பது, வீடியோக்கள் பார்ப்பது சர்வ சாதாரணமாகி விட்டது.இது போன்ற செயல்களால் எரிச்சல் அடைந்த நபர் ஒருவர், பேருந்தில் பயணிக்கும் போது, சத்தமாக பாட்டுக் கேட்கவும், வீடியோ பார்க்கவும் தடை விதிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில், ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.இது தொடர்பான பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள், பேருந்துக்குள் அதிக சத்தத்துடன் பிறருக்கு தொந்தரவு தரும் வகையில் செல்போனில் வீடியோ அல்லது பாட்டு கேட்க தடை விதிக்கப்படுவதாகவும், பயணிகளுக்கு இதுதொடர்பான அறிவுறுத்தலை ஓட்டுநர், நடத்துநர்கள் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.நீதிமன்ற உத்தரவை பின்பற்றத் தவறும் பயணிகளை பேருந்தில் இருந்து பாதியிலேயே இறக்கிவிடலாம் எனவும் போக்குவரத்து ஊழியர்களுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #கர்நாடகஅரசு #பேருந்து_பயணிகள் #பாட்டு #உயர்நீதிமன்றம் #HighCourt #Karnataga #Bus_Passengers #Play_Song