பிரபல ரவுடி மீது போலீஸ் துப்பாக்கி சூடு மதுரையில் பரபரப்பு!
மதுரை : அண்ணாநகர், செண்பகத் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் குருவி விஜய். 27 வயதாகும் இவன் மீது வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் இவன் ரவுடியாக அந்த பகுதியில் வலம் வந்துள்ளான்.இதனால் இவரை போலீசார் தேடிவந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த விஜய், தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தான். இந்த நிலையில், நேற்று இரவு மதுரை வந்த குருவி விஜய், அவனுடைய நண்பனான கார்த்திக் என்பவனுடன் சேர்ந்து செண்பகத் தோட்டம் பகுதியில் மது அருந்தியுள்ளான்.அப்போது அந்த வழியாக வந்த 24 வயது இளம் பெண்ணை வழிமறித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், அந்த இளம்பெண்ணை காப்பாற்ற முயன்ற அவரின் மாமாவையும் இந்த ரவுடிகள் சரமாரியாக அடித்து உதைத்தனர்.இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவர்களை பிடிக்க முற்பட்டனர். அப்போது அந்த ரவுடிகள், போலீசார் மீது கற்களை வீசிவிட்டு தப்பி ஓட முயன்றனர்.இதனால் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் அவர்களை நோக்கி ஒரு ரவுண்டு துப்பாக்கியால் சுட்டார். இதில், குருவி விஜய் காலில் குண்டு பாய்ந்தது. இதனையடுத்து அவனையும், அவனது கூட்டாளி கார்த்திக்கையும் கைது செய்தனர்.இதில், ரவுடி குருவி விஜய் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் அனுமதித்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அந்த இளம் பெண்ணிடம் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #மதுரை #ரவுடி #பாலியல்_பலாத்காரம் #மதுரை_போலீஸ் #Madurai #Rowdy #Madurai_Police