ஒரு சிகரெட்டுக்காடா ! கடைய கொளுத்துவ!!!
திருப்பூர் நொச்சிபாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை அருகில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரின் கடைக்கு நேற்றிரவு போதை ஆசாமி ஒருவர் வந்திருந்தார்.
அந்த போதை ஆசாமி 500 ரூபாய் கொடுத்து சிகரெட் கேட்டுள்ளார். ஆனால், செந்தில்குமார் சில்லறை இல்லை என கூறி அவர் சிகரெட் இல்லை என கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்ப்பட்டது.
அவர் கடையை பூட்டி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார். ஆனால், அந்த போதை ஆசாமி அந்த கடையில் இருந்து செல்லாமல் அங்கிருந்த வாகனத்தில் பெட்ரோல் பிடித்து வந்து ஊற்றி விட்டு, சாவகாசமாக தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.
இதனை கண்ட அருகில் உள்ளவர்கள் கடையில் உள்ள தீயை அணைத்தனர். இதனால், அந்த கடையில் வைத்திருந்த பொருட்கள் தப்பின. இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #திருப்பூர் #Thiruppur #சிகரெட் #Cigarete