கம்பி நீட்ட முயன்ற காதல் மன்னன், தர்ம அடியால் தாலி கட்டியதன் பின்னணி..
பல பெண்களின் வாழ்வை நாசமாக்கும் வகையில் காதல் என்ற பெயரில் தனது வலையில் விழ வைத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார் கும்பகோணத்தைச் சேர்ந்த தியாகராஜன். இதே வரிசையில் கும்பகோணத்திலுள்ள இளம்பெண் ஒருவருடன் உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயன்ற போது, அப்பெண்ணின் உறவினர்கள் அந்த வாலிபரை பிடித்து திருமணம் நடத்தி வைத்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணத்தில் உள்ள நாகேஸ்வரன் வடக்கு வீதியை சேர்ந்தவர் ஸ்வேதா. ஸ்வேதாவின் தாய் இறந்துவிட்டதாலும், தந்தை வேறொரு பெண்ணை திருமணம் செய்து சென்று விட்டதாலும் தனது அத்தை,மாமா பாதுகாப்பில் வளர்ந்து வருகிறார். மேலக்காவேரியில் உள்ள சாமியான பந்தல் காண்டிராக்டரிடம் ஸ்வேதா வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் கும்பகோணம் துக்காம் பாளையம் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் என்ற வாலிபர். ஸ்வேதா வேலைபார்க்கும் இடத்திற்கு அடிக்கடி தியாகராஜன் சென்று வந்துள்ளார். இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து கடந்த நான்கு வருடங்களாக அவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். பெண் நிலையில் ஸ்வேதாவும் தனது காதலனான தியாகராஜனை நம்பி தனிமையில் சென்றுள்ளார், அவர்களும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தியாகராஜன் தனக்கு சென்னையில் வேலை கிடைத்துள்ளதாகவும், அங்கு சென்று வேலையை நிரந்தர மாக்கியவுடன், ஸ்வேதாவை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறிவிட்டுச் சென்றுள்ளார். இதன்பிறகு தியாகராஜன் அடிக்கடி கும்பகோணத்திற்கு வந்து ஸ்வேதாவை சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இவ்வாறு கடந்த முறை ஸ்வேதாவை சந்திக்க கும்பகோணம் வந்த தியாகராஜனின் செல்போனில் அவர் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த பல புகைப்படங்களும், ஆபாச வாட்ஸ்அப் எஸ்எம்எஸ்கள் மற்றும் பல பெண்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை கண்டு ஸ்வேதா மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து ஸ்வேதா தியாகராஜனிடம் கேட்டபோது அவர் சரியான பதில் அளிக்காமல் சென்றுள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு தியாகராஜன் ஸ்வேதாவை சந்திப்பதைத் தவிர்த்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஸ்வேதா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தியாகராஜனிடம் மீண்டும் மீண்டும் வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் தியாகராஜன் ஸ்வேதாவுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று ஸ்வேதாவை மிரட்டியுள்ளார். என்ன செய்வதென்று தெரியாத ஸ்வேதா தியாகராஜனுடன் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் இன்று ஸ்வேதாவின் வீட்டிற்கு வந்த தியாகராஜன் அவரை சமாதானப்படுத்தி உல்லாசமாக இருக்க முயன்றுள்ளார். ஆனால் ஸ்வேதா அதற்கு இணங்காமல் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தியாகராஜனிடம் மன்றாடியுள்ளார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த ஸ்வேதாவின் அத்தை நடந்தவற்றை பார்த்து ஸ்வேதாவை விசாரித்துள்ளார். ஸ்வேதாவும் தியாகராஜன் உடன் ஏற்பட்ட பழக்கத்தையும், தாங்கள் உல்லாசமாக இருந்ததையும், தன்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றியதையும், தியாகராஜன் பல பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளதையும் கூறியுள்ளார். இதனை எடுத்த தியாகராஜன் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளார், ஆனால் அக்கம்பக்கத்தில் உள்ள அனைவரும் ஒன்று கூடி தியாகராஜனுக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். இவ்வாறு தர்ம அடி கொடுத்த நிலையில் தியாகராஜனுக்கு ஸ்வேதாவிற்க்கும், அந்தப் பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் நடத்தி வைத்துள்ளனர். அப்போது அங்கு வந்த ஸ்வேதாவின் மாமா தியாகராஜனை பார்த்து உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் எங்கள் வீட்டு பெண்ணை இவ்வாறு ஏமாற்றுவாய்? என்று அடிக்க முயன்றுள்ளார். சுற்றி இருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.பின்னர் ஸ்வேதாவையும் தியாகராஜனையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பெண் வீட்டார்கள் அளித்த புகாரின் பேரில் தியாகராஜன் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளதையும் எவ்வாறு அந்த பெண்களை ஏமாற்றினார் என்றும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இவ்வாறு பல பெண்களை ஏமாற்றி அவர்களுடன் உல்லாசமாக இருந்து வந்ததும், கடைசியாக ஸ்வேதாவை ஏமாற்ற முயன்ற போது சிக்கிக் கொண்ட காதல் மன்னனை தர்மஅடி கொடுத்து திருமணம் நடத்தி வைத்த சம்பவம் கும்பகோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.