செவிலியரை திசைதிருப்பி நூதனதிருட்டு : சிசிடிவி காட்சியில் சிக்கிய தம்பதி!!!
திருமங்கலம் மருத்துவமனையில் செவிலியரை திசைதிருப்பி செல்போனை திருடிய தம்பதியினரின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
மதுரை திருமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியரை திசைதிருப்பி செல்போனை திருடிச்சென்ற தம்பதியினரின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் அரசு மருத்துவமனை அருகே உள்ள ஸ்ரீ கிருஸ்ணா தனியார் மருத்துவமனையில் திருமங்கலத்தைச் சேர்ந்த ஹீராபானு, தெற்கு தெருவை சேர்ந்த தேவி பிரியா ஆகியோர் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் மருத்துவமனைக்கு முகக்கவசம் அணிந்து வந்த தம்பதியினர் சென்ற பிறகு மருத்துவமனை வரவேற்பறையில் வைத்திருந்த செல்போன் களவு போனது.இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்ததில். அந்த முகக் கவசம் அணிந்து வந்த மர்ம தம்பதியினர் இரண்டு செவிலியர்கள் திருப்பி, செல்போனை திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் செவிலியர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து செல்போனை திருடிச் சென்ற மர்ம தம்பதியினரை போலீசார் தேடி வருகின்றனர்.
செய்திகள் : பா.நீதிராஜன், மதுரை
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #மதுரை #திருமங்கலம் #திருட்டு #Madurai #Thirumangalam