தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்திற்குட்பட்ட கடையம்பெரும்பத்து CITU காமராஜர் ஆட்டோ சங்கத்தில் வெகு சிறப்பாக சரஸ்வதி பூஜை நடைபெற்றது.இந்த பூஜையில் சுமார் இருபது வண்டிகள் பங்கு பெற்றது. பூஜையானது சுமார் மாலை ஐந்து மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு CITU ஆட்டோசங்க கொடியினை CITU மின்ஊழியர் சங்கத்தை சார்ந்த ஜெயராஜ் என்பவர் ஏற்றி தொடங்கி வைத்தார்.கடையம்பெரும்பத்து ஆட்டோசங்கத்தின் தலைவர் அற்புதஜெகன்பிரகாஷ் தலைமையில் பூஜை ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஒற்றுமையோடு மிகச்சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இரவு 6மணியளவில் அனைத்து வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக ஊர்வலமாக மேட்டூர், வெள்ளைப்பனையேறிப்பட்டி, அரியப்பபுரம், கீழஅரியப்பபுரம், ரகுமானியாபுரம், வெய்க்காலிப்பட்டி அருந்ததியர் காலனி வரை சென்று இரவு 7மணியளவில் ஸ்டாண்டில் வந்து இனிதே நிறைவுபெற்றது.ஆட்டோ ஸ்டாண்ட் செயலாளர் செந்தில்குமார், ஆட்டோ ஸ்டாண்ட் பொருளாளர் மா.அருவேல்ராஜ், மற்றும் ஆட்டோ ஸ்டாண்ட் உறுப்பினர்கள் மேட்டூர் ஜோசப்,ஆசிர்வாதம், வெள்ளைப்பனையேறிப்பட்டி வை. முருகன், கார் முருகன், வெய்க்காலிப்பட்டி செல்வக்குமார், வின்முருகன், விக்னேஷ், ராஜா, மாசானம், கைலாசம் தெற்குமாலைசூடிப்பட்டி வன்னிராஜா, ஐயங்கண்ணு, சரவணப்பெருமாள், ஆகியோர்கள் கலந்து கொண்டனர். விசில் செய்தியாளர் திருமுருகன்
Read Next
1 day ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
3 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
4 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
4 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
4 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
5 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
5 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
5 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
6 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
6 days ago
வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!
Related Articles
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வீதியில் உலா வந்த காட்டு மாடு
August 11, 2024
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை ரெட் அலர்ட்
November 16, 2020
Check Also
Close
-
மழைநீர் சேமிப்பில் உலக சாதனை: உலகச் சாதனை அமைப்புகள் பாராட்டுDecember 1, 2021