க்ரைம்செய்திகள்

பட்டப்பகலிலே பாஜக நிர்வாகி வீட்டில் கொள்ளையடித்த மர்மகும்பல்!!!

பட்டப்பகலிலே பாஜக நிர்வாகி வீட்டில் கொள்ளையடித்த மர்மகும்பல்!!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் முத்தையா நகர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட இளைஞரணி செயலாளர் விஜயராஜன் வீட்டில் பட்டப்பகலில் துணிகர கொள்ளை.

மதுரையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நான்கு வழி சாலை ஓரமாக திருமங்கலம் முத்தையா நகர் பகுதி அமைந்துள்ளது. தேசிய நான்கு வழி சாலை ஓரத்தில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் விஜயராஜன் வீடு உள்ளன. வீட்டில் விஜயராஜன் தாயார் சாரதா,மனைவி வீரபாண்டீஸ்வரி, மகன் மிற்றன், மகள் ஹெனினா இருந்துள்ளனர்.

விஜயராஜன் வெளியே சென்றதைப் பார்த்து 4 பேர் கொண்ட கும்பல் பட்டாக்கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அருகில் உள்ள வீட்டு பாண்டி என்பவர் வீட்டை தட்டியுள்ளனர்.

இதனை விஜயராஜேந்திரன் தாயார் சாரதா பார்த்து சத்தம் போட்டுள்ளார். பிறகு அங்கிருந்து நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் விஜயராஜேந்திரன் சாரதா யார் ?என்று கேட்டு சாரதாவை கழுத்தில் கட்டிய வைத்து வீட்டுக்குள் தள்ளி அடித்து அனைத்து நகைகளையும் எடுத்துவர துன்புறுத்தியுள்ளனர்.

வீட்டிற்குள் ராஜேந்திரன் மனைவி வீரபாண்டிஸ்வரி மற்றும் அவரது மகன் மித்ரன் மகள் ஹெணினி இருந்துள்ளனர். வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் குழந்தைகள் முடிகளை பிடித்து இழுத்தும், வீரபாண்டீஸ்வரியை சித்திரவதை செய்தும், மூதாட்டி சாரதவை அடித்தும், வீட்டிலிருந்த 130000 பணமும் 10 பவுன் தங்க சவரன் நகை கொள்ளையடித்து வெளியில் செல்லும் வரை கத்தக்கூடாது என்று 10 வயது சிறுவன் மித்ரனை தேசிய நான்கு சாலை வரை சிறுவனின் கழுத்தில் கத்தி வைத்து பயம் காட்டி அங்கிருந்து தப்பியுள்ளார்கள்.

கொள்ளயனிடம் இருந்து தப்பிய சிறுவன் தந்தை விஜய ராஜேந்திரனுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை கூறியதன் அடிப்படையில் விஜய ராஜேந்திரன் திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன் நேரில் வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டார். மேலும் கைரேகை நிபுணர்கள் மோப்ப நாய் வரவழைத்து விசாரணை நடை பெற்றது.

இச்சம்பவம் பட்டப்பகலில் அதிக ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திருமங்கலம் நகர் பகுதியில் தொடர் திருட்டு கொள்ளை சம்பவம் அதிகமாக உள்ள நிலையில் இப்பகுதி மக்கள் காவல்துறையினர் திருமங்கலம் நகர் மக்கள் நலனை கருத்தில் கொண்டு கொள்ளையர்களை பிடித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகின்றன.

செய்திகள் : பா.நீதிராஜன், மதுரை

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #மதுரை #திருமங்கலம் #தொடர்_கொள்ளை #பாஜக #திருட்டு_கும்பல் #Tamilnadu #Madurai #Thirumangalam #BJP

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button