வளரும் தலைமுறைக்கு “பசுமை உருவாக்குவோம்” பயிற்சி
திருமங்கலம் கள்ளிக்குடியில் உள்ள சித்தர்கூடம் அறக்கட்டளை இதுவரை நூற்றுக்கணக்கான இடங்களில் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு வருகின்றனர்.”மரம் பல வளர்த்திடு! மழை வளம் பெற்றிடு”* என்ற வாசகத்திற்கு இணங்க சித்தர் அரசயோகி கருவூறார் அவர்களின் கொள்கையின் படி வாரந்தோறும் பல இடங்களில் மரங்களை நட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சித்தர்கூடம் திருமங்கலம் களப்பணி நண்பர்கள் குழுவினர்களால் இன்றைய தினம் வளரும் இளம்தலைமுறையினர்களுக்கான ” பசுமையை உருவாக்குவோம்” பயிற்சிதிருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திருமதி.த.அனிதா MA.BEd. MPHil திருமங்கலம் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இப்பயிற்சி வகுப்பில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்துக்கொண்டு இயற்கை பாதுகாப்பு தொடர்பான தங்களது தனித்திறமைகளை ( பேச்சுத்திறமை, நடனம், சிலம்பம், கவிதை வாசித்தல், ஓவியம் தீட்டுதல் ) வெளிப்படுத்தினார்கள்.
மேலும் இப்பசுமை பயிற்சி வகுப்பில் திரு.இரவீந்திரன் நடராஜன் இறகுகள் அம்ரித்தா இயற்கை பேரவை நிறுவனர் அவர்கள் குழந்தைகளுக்கு ” இயற்கை சூழல் பற்றி பயிற்சி” யும் திரு.மணிகண்டன் (ஆசிரியர் இரயில்வே பள்ளி) அவர்கள் குழந்தைகளுக்கு ” மக்களை மதிக்கும் பண்பு ” பற்றிய பயிற்சியும், திருமதி.முனைவர் வே.மீனா ( கணித பேராசிரியை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி) அவர்கள் குழந்தைகளுக்கு ” மாணவர்களின் ஆளுமை மேம்பாடு” பற்றிய பயிற்சியும் திரு.C.A.A .கிருஷ்ணமூர்த்தி இயற்கை ஆர்வலர் அவர்கள் கலந்துக்கொண்டு குழந்தைகளுக்கு நமது மாநில மரமான ” பனை மரங்களின் பயன்கள்& சிறப்புகள் குறித்து பயிற்சியும் அளித்தார்கள்.
திருமதி.பல்கீஸ்பேகம் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிரணி பொறுப்பாளர் அவர்கள் இப்பசுமைபயிற்சியில் குழந்தைகளின் ஈடுபாடு மற்றும் பெற்றோர்களின் ஈடுபாடு குறித்தும் சிறப்புரையாற்றினார்கள்.
“பசுமையை உருவாக்குவோம்” பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் அவர்கள் திறமையை ஊக்குவிக்கும் வண்ணம் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் சித்தர்கூடம் திருமங்கலம் களப்பணி நண்பர்கள் குழு சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
செய்திகள் : பா.நீதிராஜன், மதுரை
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #பசுமை #மரம்நடல் #குழந்தை_தினம் #ஜவஹர்லால்நேரு #சித்தர்கூடம் #மதுரை #திருமங்கலம் #கள்ளிகுடி #Madurai #Thirumangalam #KalliKudi #ChildrensDay #JawaharlalNehru #SiththarKoodam