“உங்களால் முடிந்ததை பாருங்கள்” வண்ணார் காலணியை ஆக்கிரமித்த தனிநபர் – மக்கள் மனு!!
திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை பகுதியில் அமைந்துள்ள வண்ணார் காலனியில் தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் நேரில் மனு.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட சித்தையன்கோட்டை ஊராட்சியில் தமிழக அரசால் வழங்கப்பட்ட இடத்தில் முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வண்ணார் சமூகத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
தற்பொழுது வண்ணார் சமூகத்திற்கு என்று வழங்கப்பட்ட காலனி இடத்தின் ஒரு பகுதி மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறுகின்றனர்.மேலும் தங்களை அந்த தனிநபர் நேரில் அழைத்து அச்சுறுத்தி வருவதாகவும் உங்களால் முடிந்ததை பாருங்கள் என்று அதிகாரத் தோரணையில் பேசுவதாகவும் கூறுகின்றனர்.
ஆகவே உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆக்கிரமிப்பு செய்த தனி நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து உதவுமாறும் மேலும் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியிருக்கும் எங்களின் நிலத்தை மீட்டுத் தருமாறும் கேட்டுக் கொள்கிறோம் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
செய்திகள் : ரியாஸ், திண்டுக்கல்
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #திண்டுக்கல் #ஆக்கிரமிப்பு #Dindukkal #Aggression