“பாடம் ஆன்லைன்ல தேர்வு மட்டும் ஆஃப்லைனா?” போராட்டத்தை நடத்திய அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள்!!
ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வுகளை நடத்த கோரி மதுரையில் அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. பின்னர் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்பட்டது. எனினும் தேர்வு நடத்துவதில் தொடக்கத்தில் இருந்தே பல்வேறு குளறுபடிகள் நிலவின.
இந்த நிலையில், மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்லூரி வகுப்புகளை நடத்திவிட்டு செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக நடத்தக் கூடாது என்றும், ஆன்லைனிலேயே நடத்த வேண்டும் எனக் கோரியும் மதுரை ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அண்ணா பேருந்து நிலையம், பூங்கா முருகன் கோயில், தமுக்கம், தல்லாகுளம் ஆகிய பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, செமஸ்டர் தேர்வை 2 வாரத்திற்குத் தள்ளிவைத்து கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. எனினும் நேரடித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #ஆன்லைன்_வகுப்பு #ஆஃப்லைன்_தேர்வு #அமெரிக்கன்_கல்லூரி #கல்லூரி_மாணவர்கள் #OnlineClass #OfflineExam #AmericanCollege #CollegeStudents #Tamilnadu