அம்மா உணவகத்தில் இலவச உணவு நிறுத்தம்!!
சென்னையில் கடந்த வாரம் பெய்த அதிக கனமழையால் நகரம் முழுவதும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது.
பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அத்தியாவசிய பொருள்கள் கிடைக்காமல் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் மழை காலம் முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என அறிவித்தார்.
ஏற்கனவே அம்மா உணவகங்களில் காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் மலிவு விலையில் உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக இலவசமாக உணவு வழங்கப்பட்டு வந்தது.இந்நிலையில் இலவசமாக வழங்கப்பட்டு வந்த உணவு மீண்டும் மலிவு விலையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.