பெட்ரோல தண்ணீயா!! என்னடா இது பித்தலாட்டமா இருக்கு!!
விழுப்புரத்தை சேர்ந்த காய்கறி வியாபாரி பெங்களூருவில் வசித்து வருகிறார். இவர், குரு பெயர்ச்சியை முன்னிட்டு தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஆலங்குடியில் உள்ள கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு திருநள்ளார் செல்வதற்கு வந்தார்.
அப்போது, காரைக்கால் – திருநள்ளார் சாலையில் அமைந்துள்ள புதுச்சேரி பாஜக மாநில மகளிர் அணி துணைத் தலைவி பிரணாம்பாள் ராதா என்பவருக்குச் சொந்தமான பிஆர்என் பெட்ரோல் பங்கில் தனது காருக்கு பெட்ரோல் நிரப்பியுள்ளார்.
அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்டு சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் சென்றபோது கார் பழுதடைந்து நின்றுவிட்டது. இதையடுத்து அவர், கார் ஷோரூமுக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த கார் மெக்கானிக் சோதனை செய்ததில், பெட்ரோலில் தண்ணீர் கலந்து இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து காரைக்கால் உணவு பாதுகாப்புத் துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை எடுத்துக் கொண்ட காவல் அதிகாரிகள் பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தினர். காரில் இருந்த பெட்ரோலையும் எடுத்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.
தொடர் புகாரில் சிக்கி வந்த இந்த பெட்ரோல் பங்க் தற்போது தண்ணீர் கலந்த பெட்ரோல் விற்பனை செய்தது வாகன ஓட்டிகளிடம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #பெட்ரோல் #டீசல் #பெட்ரோல்_கலப்படம் #Petrol #Diesel #PetrolMixing