போராட்டம் செய்தவர்களை தலைதெறிக்க ஓட வைத்த பாம்பு!!
திட்டக்குடி அருகே தரை பாலத்தை அகற்றிவிட்டு மேம்பாலம் அமைக்ககோரி, விவசாயிகள் நீரில் இறங்கி போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது, போராட்டத்தில் இடையே பாம்பு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்து உள்ள நாவலூர் என்ற கிராமத்தில் தரைப்பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தின் வழியாக அக்கிராம மக்கள் சாத்தநத்தம், ஆலங்குடி சென்று, பின்னர் திட்டக்குடி, கடலூர் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக பாலத்தின் மீது அதிக தண்ணீர் சென்று உள்ளது. இதனால் அந்த பாதையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதனையடுத்து இந்த தரைப்பாலத்தை அகற்றிவிட்டு, மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அந்த பாலத்தின் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்களின் சிலை ஓடிக்கொண்டிருந்த தண்ணீரில் இறங்கி போராட்டத்தில் குதித்தனர். கிராம மக்களின் போராட்டத்தை அறிந்து வந்த வட்டார அலுவலர், பொது மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இந்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே, ஓடும் தண்ணீரில் ஒரு பாம்பு வந்ததை கண்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தலைதெறிக்க ஓடினர். இதனால் அந்த இடத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள்