அராஜகம்!!பெண் காவலரை தாக்க முயன்ற திமுக நிர்வாகி!!
சென்னையில் பெண் போக்குவரத்து காவலரை தாக்கியதாக, திமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் பெய்த கனமழை காரணமாக புளியந்தோப்பில் கடந்த 7 நாட்களாக பல பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளன. மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனை கண்டித்து புளியந்தோப்பு காவல் நிலையம் அருகே நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் ஸ்ட்ரஹான்ஸ் சாலை பேரக்ஸ் சாலை சந்திப்பு பகுதியில் போக்குவரத்து போலீஸார் தடுப்புகள் அமைத்து, மாற்று பாதையில் வாகனங்கள் திருப்பி விட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் போலீசார் ஏற்படுத்தியிருந்த தடுப்புகளை அகற்றினர்.மேலும், தடை செய்யப்பட்ட அந்த பாதையில் செல்ல முயன்றனர்.
அப்போது அங்கு பணியில் இருந்த பெண் போக்குவரத்து காவல் ஆய்வாளர், அவர்களை மாற்று பாதையில் செல்லுமாறு தெரிவித்துள்ளார்.இதனால், பெண் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த இருவரும், அந்த பெண்ணை தாக்க முயற்சி செய்துள்ளனர். (தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது).
பெண் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை பொதுமக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக பெண் காவலர் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து அந்த பெண் காவலர் அளித்த புகாரின் அடிப்படையில், அந்த இருவர் மீதும் ஆபாசமாக பேசுதல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.பெண் காவலரை தாக்க முயன்ற அந்த இரண்டு நபர்களும் திமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த சதீஷ் மற்றும் விவேக் பாபு என்பது தெரியவந்துள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #சென்னை #பெண்காவலர் #திமுக #திமுக_நிர்வாகிகள் #தமிழ்நாடு #தமிழகஅரசு #Chennai #WomenPolice #DMK #Tamilnadu