“தேவையற்ற போராட்டம் முற்று புள்ளி” தேர்வு ஆஃப்லைனில் மட்டும் தான்!!உயர்கல்வித்துறை முடிவு!!
தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகளை, ஆன்லைன் வழியாக மட்டுமே நடத்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மதுரை அமெரிக்கன் கல்லூரியை சேர்ந்த இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் கடந்த இரண்டு தினங்களாக இதே கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நேற்று நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வுகள் இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது.இந்த மாணவர்களின் போராட்டத்தின் எதிரொலியாக இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரிகளில் மாணவர்கள் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகளை நடத்த கோரி போராட்டத்தில் இறங்கினர்.இந்த நிலையில், தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் உள்ளிட்ட அனைத்து வகையான கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் என்று உயர் கல்வித் துறை செயலாளர் திட்டவட்டமாக அந்த அறிவிப்பில் தெரிவித்து உள்ளார்.உயர்கல்வித்துறை செயலாளர் அறிவிப்பை அடுத்து மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு, வகுப்புகளிலும், பாடத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #செமஸ்டர்தேர்வு #கல்லூரிமாணவர்கள் #ஆன்லைன்தேர்வு #தமிழ்நாடு #தமிழ்நாடுஉயர்கல்வித்துறை #SemesterExam #OnlineExam #Tamilnadu