சாலையில் திடீர் பள்ளம்!! போக்குவரத்து நிறுத்தம்!!
பொள்ளாச்சியை அடுத்தஆழியார் வனத்துறை சோதனைச்சாவடி அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பொள்ளாச்சி, ஆழியாறு, வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. ஆழியாறு பகுதியில் 66 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இந்நிலையில் ஆழியாறு வனத்துறை சோதனைச் சாவடி அருகே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலையில் ஒரு பகுதியில் திடீரென பள்ளம் ஏற்பட்டது.
அங்கு பணியில் இருந்த வனத்துறையினர், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளை கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தி வந்தனர். சிறிது நேரத்தில், சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து, பொள்ளாச்சி -வால்பாறை சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படட்டது. சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பொள்ளாச்சி வால்பாறை சாலையில் வாகன போக்குவரத்து தடைபட்டது.
இதன் காரணமாக பள்ளி, கல்லூரி மற்றும் பணிகளுக்கு செல்வோர் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்.தகவல் அறிந்து பல மணி நேரமாகியும் நெடுஞ்சாலைத் துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை. இதனால் போக்குவரத்து துறையினரே அதிரடியாக களத்தில் இறங்கி சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். உள்ளசுமார் 4 மணி நேரம் நீடித்த இந்த சீரமைப்பு பணிக்கு பிறகு வாகனங்கள் செல்லத் தொடங்கின.
செய்திகள் : ஜெகன், பொள்ளாச்சி.