காதலி பேசாததால் காதலன் எடுத்த முடிவு!!!
காதலி பேசாததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
நாமக்கல் மாவட்டம் சேரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (19).
இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது ஊரை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
கடந்த ஓராண்டாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்றதால் அவர் சொந்த ஊரிலே பகுதி நேர வேலைபார்த்து வந்துள்ளார். படிப்பு முடிந்ததும் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
கல்லூரி திறக்கப்பட்டதால் மீண்டும் கல்லூரிக்கு சென்றுள்ளார். தனது சகோதரியின் திருமணத்துக்கு சென்ற போது அவரது காதலி அவருடன் பேசவில்லை என கூறப்படுகிறது.
இதனால், மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி சோகத்தில் மூழ்கியுள்ளது.