முன்னாள் பஞ்சாயத்து தலைவரை தற்கொலைக்கு தூண்டிய முன்னாள் அமைச்சர்!! பரபரப்பு!!
தற்கொலைக்கு தூண்டியதாக முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் மீது வழக்கு பதிய கோரி உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலைக்கு தூண்டியதாக முன்னாள் அமைச்சர் அன்பழகன் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரியை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்கொலைக்கு தூண்டியதாக முன்னாள் அமைச்சர் அன்பழகன் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
அவரின் அந்த மனுவில், டெண்டர் தொடர்பான பிரச்சனையில், முன்னாள் அமைச்சர் அன்பழகன் தன்னை தற்கொலைக்கு தூண்டியதாக தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், சென்னை காவல் ஆணையர், கோட்டை காவல் ஆய்வாளர் இந்த வழக்கு சம்பந்தமாக பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.