லைஃப் ஸ்டைல்

பெயர்தான் சுண்டைக்காய்!! ஆனா நன்மைகள் என்னவோ ஏராளம்!!

பெயர்தான் சுண்டைக்காய்!! ஆனா நன்மைகள் என்னவோ ஏராளம்!!

சுண்டைக்காய் மிகவும் சுலபமாக கிடைக்கக்கூடிய காயாக இருந்தாலும் அது மிகவும் அருமையான மருத்துவ பண்புகளைக் கொண்டது.

கிராமப்புறங்களில் அதிகம் கிடைக்கக்கூடிய காய் ஆகும். துவர்ப்பு சுவைகள் கொண்ட காய்கள் மிகவும் குறைவாக இருப்பதால், நாம் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

சுலபமாக கிடைக்க கூடிய எதற்கும் அதிக மதிப்பு கொடுப்பதில்லை என்பதற்கு சுண்டைக்காயை உதாரணமாக சொல்லலாம். இதில் உள்ள மருத்துவ குணங்களை பட்டியலிடலிட்டுக் கொண்டே செல்லலாம். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் சுண்டைக்காய், ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக் குழாய்களில் படிவதைத் தவிர்க்கக்கூடியது. ரத்தத்தில் உள்ள வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய தன்மை கொண்டது சுண்டைக்காய்.

இதில் விட்டமின் ஏ, பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, தயாமின், ரிபோஃப்ளேவின் என பலவிதமான சத்துக்களும் அதிக அளவில் உள்ளது. காய்ச்சல் இருக்கும்போது, சுண்டைக்காயை உணவில் (Foods for health) சேர்த்துக் கொண்டால், வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்கும். நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுக்ககூடிய தன்மைகளைக் கொண்டுள்ள சுண்டைக்காய், பார்வைத்திறனை அதிகரிக்கவும், நினைவாற்றலை கூட்டவும் உதவும்.

பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி , உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தி கொண்டதால் பிரசவமான பெண்களுக்கு கொடுக்கும் பத்திய சாப்பாட்டில் இடம்பெறும் ‘அங்காயப் பொடி’ என்னும் சத்துமிக்க பொடியில் சுண்டைக்காயும் இருக்கும்.

இவற்றைத் தவிர, சுண்டக்காயை நன்றாக கழுவி காய வைத்து கொள்ளுங்கள். நன்றாக காய்ந்த சுண்டக்காயை கொஞ்சமாக நெய் விட்டு வறுத்து பொடியாக்கி பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டால், வயிற்று வலி, குடற்புழு, மற்றும் வயிறு சம்மந்தமான பிரச்சனைகளுக்கு (Health Problems) பயன்படுத்தலாம். ஒரு கப் பால் அல்லது வெந்நீரில் சுண்டைக்காய் பொடியைக் கலந்து குடித்தால் உடனே உபாதை சரியாகிவிடும்.

உயர் ரத்த அழுத்தம், மலச்சிக்கல், சர்க்கரை நோய் போன்றவற்றுக்கு கூட இந்த பொடி மிக சிறந்த தீர்வாகிறது. ஆஸ்துமாவால் அவஸ்தைப்படுபவர்கள், சுண்டைக்காய் பொடியை சூப் , கஞ்சி போன்றவற்றில் சேர்த்து குடிக்கலாம்.
சுண்டைக்காய் வத்தலை மிக்ஸியில் போட்டு அரைத்து அதனுடன் சிறிதளவு தேன் கலந்து கொடுத்தால் வயிற்றுப் பூச்சிகள் அழிந்து குடல் மற்றும் வயிறு சுத்தமாகும். செரிமானக் கோளாறு ஏற்பட்டால், ஒரு டம்ளர் மோரில் இரண்டு சிட்டிகை சுண்டைக்காய் வற்றல் தூளை சேர்த்து குடித்து வந்தால் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

வாயு பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் வாரம் இரு முறை சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் நிவாரணம் கிடைக்கும். சுண்டைக்காயில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால் எலும்புகளுக்கு வலுவூட்டி, இதனால் மூட்டு வலி, இடுப்பு வழி போன்றவை வராமல் தடுக்கும்.

இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட சுண்டைக்காயைப் பற்றி மருத்துவத்திற்கு மகத்தான பங்களித்திருக்கும் சித்தர் அகத்தியர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

நெஞ்சின் கபம்போம் நிறைகிருமி நோயும்போம்
விஞ்சுவா தத்தின் விளைவும்போம் – வஞ்சியரே
வாயைக் கசப்பிக்கும் மாமலையில் உள்ள சுண்டைக்
காயைச் சுவைப்பவர்க்குக் காண்!!

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button