பட்டா பெயர் மாற்றம் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் பள்ளப்பட்டி ஊராட்சியில் நடைபெற்றது.
திண்டுக்கல் மேற்கு வட்டம் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் வருவாய் கிராம அளவிலான சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து வருவாய் கிராமங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்நிலையில் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம், பள்ளப்பட்டி ஊராட்சியில் சிறப்பு முகாம் வருவாய் கோட்டாட்சியர்
காசிசெல்வி தலைமையில் நடைபெற்றது. மேற்கு தாசில்தார் ரமேஷ்பாபு, பள்ளபட்டி ஊராட்சி தலைவர் பரமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வருவாய் கிராமங்களில் உள்ள பள்ளப்பட்டி, அணைப்பட்டி,
குரும்பப்பட்டி ஆகிய பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பட்டாவில் உள்ள பெயர் மாற்றம் மற்றும் பெயர் திருத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மனு அளித்தனர். அம்மனுவை சரிபார்த்து உடனே மாற்றி கொடுத்து தீர்வு காணப்பட்டது.
இதில் பள்ளப்பட்டி ஊராட்சி துணை தலைவர் தனலெட்சுமி செல்லப்பாண்டி, விஏஓ ராமர் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
செய்திகள் : ரியாஸ், திண்டுக்கல்